IND vs NZ: சாதனை நிகழ்த்திய ஸ்ரேயஸ் ஐயர்!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அறிமுக வீரர் ஸ்ரேயஸ் ஐயர் அரைசதம் கடந்த புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதைலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 345 ரன்களைச் சேர்த்தது.
அதன்பின் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய விளையாடிய இந்திய அணி, நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இருப்பினும் அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடிவரும் ஸ்ரேயஸ் ஐயர் மட்டும் நிலைத்து நின்று விளையாடி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பி வருகிறார்.
தொடர்ந்து அபாரமாக விளையாடிய வரும் ஸ்ரேயஸ் முதல் இன்னிங்ஸில் சதமடித்தது மட்டுமில்லாமல், இந்த இன்னிங்ஸில் அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.
இதன்மூலம் அறிமுக டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸிலும் அரைசதம் கடந்த மூன்றாவது வீரர் எனும் பெருமையை ஸ்ரேயஸ் பெற்றார்.
மேலும் அறிமுக டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதம், இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்த முதல் இந்திய வீரர் எனும் வரலாற்று சாதனையை ஸ்ரேயஸ் ஐயர் படைத்துள்ளார்.
முன்னதாக இந்திய அணியின் திலாவர் ஹுசைன், சுனில் கவஸ்கார் ஆகியோர் தங்களது அறிமுக டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸிலும் அரைசதம் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now