பறந்து பறந்து கேட்ச் பிடித்த சூர்யகுமார் யாதவ்; வைரல் காணொளி!
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் காற்றில் பறந்து பறந்து கேட்ச் பிடித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நியூசிலாந்து - இந்தியாவுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங் தேர்வு செய்தார். அகமதாபாத் மைதானத்தில் நடந்து வரும் இந்தப் போட்டியில் முதலில் இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் இருவரும் ரன் கணக்கை தொடங்கினர். வழக்கம் போல் இந்தப் போட்டியிலும் சொதப்பிய இஷான் கிஷான் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி அதிரடியாக ஆடினார். அவர், 22 பந்துகளில் 3 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 44 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் 24 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா ஓரளவு ரன் சேர்த்தார். அவர், 17 பந்துகளில் ஒரு சிக்சர், 4 பவுண்டரி உள்பட 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 4ஆவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 103 ரன்கள் வரை சேர்த்துள்ளது. ஒருபுறம் வானவேடிக்கை காட்டிய சுப்மன் கில் அதிரடியாக விளையாடி டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். அனைத்து பார்மேட் போட்டிகளிலும் சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் சுப்மன் கில்லும் இணைந்துள்ளார். இறுதியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் குவித்தது.
Trending
இதையடுத்து கடினமான இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி தான் காத்திருந்தது. போட்டியின் முதல் ஓவரை வழக்கம் போல் இந்த முறையும் இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா தான் வீசினார். முதல் ஓவரின் 5 ஆவது பந்தில் பின் ஆலென் அடிக்க, பந்து பேட்டில் பட்டு ஸ்லிப்பில் நின்றிந்த சூர்யகுமார் யாதவ்விற்கு மேல் சென்றது. ஆனால், பந்து வருவதை அறிந்த சூர்யகுமார் யாதவ் சரியான நேரத்தில் மேலே பறந்து கேட்ச் பிடித்தார்.
அதே போன்று மற்றொரு கேட்ச்சையும் பிடித்தார். ஹர்திக் பாண்டியா வீசிய 2.4 ஆவது ஓவரில் கிளென் பிலிப்ஸ் ஸ்லிப்பில் நின்றிருந்த சூர்யகுமார் யாதவ் பக்கமாக பந்தை அடிக்க, அது அவர் இருக்கும் உயரத்திற்கு மேல் சென்றது. இருந்தாலும், மேலே பறந்து பந்தை கேட்ச் பிடித்தார். இதன் மூலம் சூர்யகுமார் பிடிக்கும் கேட்ச் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அவருக்கு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Suryakumar Yadav has taken 2 similar catches at slips - excellent catch. pic.twitter.com/8EWY0uIxKd
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 1, 2023
அதோடு, ஷிவம் மவி வீசிய 8.3ஆவது ஓவரில், சான்ட்னெர் சிக்சர் அடிக்க, அது சிக்சர் லைனில் நின்றிருந்த சூர்யகுமார் யாதவ்விடம் மாட்டிக் கொண்டது. அந்த பந்தை விட்டால் சிக்சர் சென்றிருக்கும். இப்படி ஒரே போட்டியில் பேட்டிங்கில் கலக்கிய சூர்யகுமார் யாதவ் பீல்டிங்கிலும் மாஸ் காட்டி வரும் நிலையில் அவருக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.
Win Big, Make Your Cricket Tales Now