
IND vs PAK, Asia Cup 2023: Pakistan Name Unchanged Playing XI For India Clash! (Image Source: Google)
கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய திருவிழாவான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் இந்தியாவில் தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்பு மினி கிரிக்கெட் திருவிழாவாக ஆசிய கோப்பைத் தொடர் நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தான், இலங்கை நாடுகள் இணைந்து நடத்தும் இந்த தொடர் பாகிஸ்தானில் கடந்த 30ஆம் தேதியே தொடங்கிவிட்டது. பாகிஸ்தான், இலங்கை அணிகள் வெற்றியுடன் இந்த தொடரை தொடங்கியுள்ள நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நாளை நடக்கிறது.
இந்திய அணி இந்த ஆசிய கோப்பையில் முதல் போட்டியிலே பாகிஸ்தானுடன் மோதுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் பல்லகலே மைதானத்தில் இந்த போட்டி மதியம் நடைபெற உள்ளது.