டி20 உலகக்கோப்பை: இந்தியாவின் வெற்றி வாய்ப்பு குறித்து ரெய்னா கருத்து!
பும்ராவுக்கான சரியான மாற்று வீரர்காக முகமது ஷமியை செல்லிவிட முடியாது என்றாலும், தற்போது அதனைத் தவிற வேறு வழியில்லை என முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடங்கி இரண்டு நாட்களுக்குள் பல்வேறு பரப்பரப்பான ஆட்டங்கள் நடைபெற்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி மோதிய பயிற்சி ஆட்டம் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
இதில் கடைசி ஓவரில் முகமது ஷமி பந்து வீசி நான்கு ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இந்திய அணிக்கு வெற்றியை பெற்று தந்தார். இந்த நிலையில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு குறித்து ரெய்னா பேசியுள்ளார்.
Trending
இதுகுறித்து பேசிய அவர், “பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று விட்டால் உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்திய அணி தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முதல் ஆட்டம் எப்போதுமே முக்கியம்.
முகமது ஷமி, இந்தியாவின் எக்ஸ் பேக்டராக இருப்பார். ஆர்ஷ்தீப் சிங், சூர்யகுமார் உள்ளிட்டோர் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர் . விராட் கோலியும் பேட்டிங்கில் அசத்தி வருகிறார். ரோஹித் சர்மா ஒரு சிறந்த கேப்டனாக இருக்கிறார். இதனால் நாம் முதல் போட்டியில் வென்றால் அது நமக்கு நல்லதை தரும். அனைவரும் இந்தியா உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று வேண்டி வருகின்றனர்.
இருப்பினும் பும்ராவுக்கு மாற்றுவீராக ஷமி அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவர் சிறந்த மாற்று வீரர் என்று என்னால் சொல்ல முடியாது. ஏனென்றால் பும்ரா, ஜடேஜா ஆகிய வீரர்களை உங்களால் வேறு வீரர்களை கொண்டு நிரப்பிட முடியாது. ஆனால் தற்போது சிறந்த முடிவு என்றால் அது முகமது ஷமி தான்.
ஷமி, கடந்த காலங்களில் இந்திய அணிக்காக நல்ல முறையில் செயல்பட்டு இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு அவரை அனுப்பியது நல்ல முடிவாக தான் இருக்கும். நடப்பு தொடரில் நாம் அச்சமின்றி விளையாட வேண்டும். அப்போதுதான் வெற்றி கிடைக்கும். 15 நாட்களுக்கு முன் ஆஸ்திரேலியா சென்றது நல்ல முடிவு. அப்போது தான் ஆஸ்திரேலிய ஆடுகளங்களுக்கு ஏற்றவாரு இந்திய அணியால் செயல்பட முடியும்” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now