
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில், இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று தொடங்கியது.
இதில், டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மோசமான தொடக்கத்தையே அளித்தனர். தென் ஆப்பிரிக்க அணியில் மார்க்ரம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனினும் இந்திய அணியின் அபார பந்துவீச்சால் அடுத்தடுத்து வந்த வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமலே ஆட்டமிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து வந்த பர்னெல் (24), மஹாராஜ் (41) ரன்கள் எடுக்க அணியின் ரன் விகிதம் சற்று அதிகரித்தது. எனினும் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 106 ரன்களை மட்டுமே தென் ஆப்பிரிக்க அணி எடுத்தது.