
IND vs SA: Dinesh Karthik Reacts After Getting A Recall In Indian Cricket Team (Image Source: Google)
இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் தனது மோசமான ஆட்டத்தின் காரணமாக 2019 ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணியில் இடம்பெறவில்லை. இதனால் அவர் சமீபத்தில் போட்டி வர்ணணையாளராகவும் செயல்பட்டு வந்தார்.
இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியில் இடம்பெற்றுள்ள தினேஷ் கார்த்தி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது விளையாட்டுக்கு பல மூத்த வீரர்களும் பாராட்டு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டி20 இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.