
இந்தியாவில் நடைபெற்று முடிந்த 15ஆவது ஐபிஎல் தொடரினை தொடர்ந்து இன்னும் சில தினங்களில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது துவங்க உள்ளது. ஜூன் 9ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த டி20 தொடரானது ரசிகர்களை நிச்சயம் குஷிப்படுத்தும் என்பதில் சற்றும் ஐயமில்லை. இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக ஐபிஎல் தொடரில் ஜொலித்த இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் தலைமையிலான இந்த இளம் இந்திய அணி எவ்வாறு செயல்படப் போகிறது என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. அதே வேளையில் தென் ஆப்பிரிக்க அணி முழு பலத்துடன் இந்திய அணியை சந்திக்கிறது.
ஏற்கனவே கடந்த முறை தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றபோது தோல்வியை சந்தித்து திரும்பிய இந்திய அணி இம்முறை அதற்கு பழிதீர்க்கும் வகையில் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் தற்போது தங்களது முழு பலத்துடன் களமிறங்க உள்ளதால் இந்திய அணி இதனை எப்படி சமாளித்து விளையாடப்போகிறது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.