SA vs IND: இந்திய அணியில் யார் யார் தேர்வுசெய்யப்படுவர்?
தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடும் இந்திய அணி இன்று தேர்வு செய்யப்படுகிறது.
ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக வரும் 17ஆம் தேதி தொடங்க இருந்த முதல் டெஸ்ட் பாக்ஸிங்டே இம்மாதம் 26ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக வரும் 17ஆம் தேதி இந்திய அணி தென் ஆப்பிரிக்கா புறப்படுகிறது.
இந்திய ஏ அணி வீரர்கள் ஏற்கெனவே தென் ஆப்பிரிக்காவில் விளையாடி வருவதால், அதில் சில வீரர்கள் தக்கவைக்கப்படலாம் எனத் தெரிகிறது. குறிப்பாக பிரியங்க் பஞ்சால், அபிமன்பு ஈஸ்வரன், இஷான் கிஷன், ஹனுமா விஹாரி ஆகியோர் தக்கவைக்கப்படலாம் எனத் தெரிகிறது.
Trending
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக ஃபார்ம் இன்றி தவித்து வரும் ரஹானே கடந்த 25 இன்னிங்ஸ்களில் 2 அரை சதம், ஒரு சதம் மட்டுமே அடுத்துள்ளார். மற்ற இன்னிங்ஸ்களில் எல்லாம் சராசரியாக 20 ரன்களுக்கு மேல் தாண்டவில்லை. ஆஸ்திரேலியத் தொடரிலிருந்து டெஸ்ட் போட்டியில் ரஹானே அதிர்ஷ்டத்தில் ஒட்டிக்கொண்டு வருகிறார்.
ஆதலால் ரஹானேவுக்கு தென் ஆப்பிரிக்கத் தொடரில் வழங்கப்படும் கடைசி வாய்ப்பாக இருக்கும் எனத் தெரிகிறது. ஆனால், துணை கேப்டன் பதவி அவரிடமிருந்து பறிக்கப்பட்டால் ரோஹித் சர்மாவிடம் வழங்கப்படலாம்.
வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவிட்டார். ஆனால், உடற்தகுதியோடு டெஸ்ட் போட்டிக்குள் வந்தாலும், திடீரென காயத்தால் காணாமல் போய்விடுகிறார். ஆதலால், இந்திய அணியில் வீரர்களுக்கு உடற்தகுதி பிரதானமாகப் பார்க்கப்படுவதால் இசாந்த் சர்மா நீக்கப்படலாம்.
அவருக்கு பதிலாக இளம் வீரர்கள் பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான் இருவரில் ஒருவர், அல்லது ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்படலாம்.
நடுவரிசையைப் பலப்படுத்த ஸ்ரேயாஸ் அய்யர், சுப்மான் கில் இருவரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். தொடக்க வரிசைக்கு மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா இருக்கிறார்கள். கூடுதலாகத் தொடக்க வீரர்களுக்கு அபிமன்யு ஈஸ்வரன், அல்லது பிரியங்க் பஞ்சால் இருவரில் ஒருவர் தேர்வாகலாம். இந்த இருவரும் புஜாரா இடத்தில் இறங்கியும் விளையாடக்கூடியவர்கள் என்பதால் பயிற்சியாளர் திராவிட் இளம் வீரர்களுக்கு அதிகமான முக்கியத்துவம் அளித்து தேர்வு செய்யப் பரிந்துரைக்கலாம்.
தென் ஆப்பிரிக்க ஆடுகளங்கள் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானவை என்பதால், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்படும். அஸ்வின், ரவி்ந்திர ஜடேஜா தவிர்த்து ஜெயந்த் யாதவ் மட்டும் தேர்வாகலாம்.
உத்தேச அணி விவரம்:
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சத்தேஸ்வர் புஜாரா, அஜின்கயே ரஹானே, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், அல்லது தீபக் சஹர், விருதிமான் சாஹா, மயங்க் அகர்வால், சுப்மான் கில், அபின்மன்யு ஈஸ்வரன், ஹனுமா விஹாரி, பிரியங்க் பஞ்சால், ஜெயந்த் யாதவ்.
Win Big, Make Your Cricket Tales Now