
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. டி20 தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த அணி, உலக கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா செல்ல உள்ளது.
இதனால், ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் தலைமையில் முற்றிலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. இதில் இடம்பெற உள்ள ஐபிஎல் வீரர்கள் குறித்து முதலில் காணலாம். ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய சதம் விளாசிய ரஜத் பட்டிதார், அண்மையில் நடைபெற்ற நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான தொடரில் கலக்கி வருகிறார்.
ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட வீரர்கள் டி20 உலககோப்பைக்காக ஆஸ்திரேலியா செல்ல உள்ளதால், ரஜத் பட்டிதார் முதல் முறையாக இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய திலக் வர்மா, மீது ஏற்கனவே அதீத எதிர்பார்ப்பு உள்ளது.