
IND vs SA: Virat Kohli Will Be The Big Wicket – Keegan Petersen Ahead Of Day 3 (Image Source: Google)
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் விராட் கோலி 79 ரன்கள் எடுத்தார்.
அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கீகன் பீட்டர்சன் 72 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் ஜஸ்ப்ரீத் பும்ரா 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்தது. இதனால் 70 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. புஜாரா 9 ரன்னுடனும், விராட் கோலி 14 ரன்னுடனும் அவுட்டாகாமல் உள்ளனர்.