
IND vs SL 1st Test (Day 1 Lunch): India are 109/2 at lunch break on Day 1 (Image Source: Google)
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் இன்று தொடங்கியது. இப்போட்டியிலிருந்து இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படவுள்ளார்.
அதன்படி இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியுள்ளது. மேலும் விராட் கோலி தனது 100ஆவது போட்டியிலும் பங்கேற்றார்.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா - மயங்க் அகர்வால் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.