
IND vs SL: Dhawan-led Indian team departs for Sri Lanka tour (Image Source: Google)
இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூலை மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியை அனுபவ வீரர் ஷிகர் தவான் வழிநடத்த உள்ளார்.
பெரும்பாலான சீனியர் வீரர்கள் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடருக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டதால் தவான் இளைஞர்கள் அதிகம் கொண்ட அணியை வழிநடத்துகிறார்.
இத்தொடருக்கான இந்திய அணி கணி கடந்த ஜூன் 14ஆம் தேதியே மும்பை சென்று அங்குள்ள பிசிசிஐ விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில், 14 நாள்கள் தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்துள்ள இந்திய அணி, தனி விமானம் மூலம் இன்று இலங்கை செல்லவுள்ளது.