
IND vs SL: Double Blow For The Sri Lankan Team Ahead Of The 2nd T20I; 2 Bowlers Ruled Out Of The Ser (Image Source: Google)
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நாளை தர்மசாலாவில் நடைபெறுகிறது. இந்நிலையில் இலங்கை அணியில் மேலும் ஒரு வீரர் காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகியுள்ளார்.