Advertisement

 இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தது வருத்தமளிக்கிறது - தசுன் ஷனகா!

வான்கடே போன்ற மைதானத்தில் ஒரு பேட்ஸ்மேன் நிலைத்து நின்றால் வெற்றியை பெற்று கொடுத்திருக்க முடியும் என இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா தெரிவித்துள்ளார்.

Advertisement
IND vs SL: It was our game to lose, says Dasun Shanaka after two-run loss!
IND vs SL: It was our game to lose, says Dasun Shanaka after two-run loss! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 04, 2023 • 12:07 PM

இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
January 04, 2023 • 12:07 PM

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தீபக் ஹூடா 41 ரன்களும், அக்‌ஷர் பட்டேல் 31 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்த இந்திய அணி 162 ரன்கள் எடுத்தது. இதன்பின் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இலங்கை அணி அறிமுக வீரர் ஷிவம் மாவி மற்றும் அதிவேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் ஆகியோரது பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

Trending

இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக சிவம் மாவி 4 விக்கெட்டுகளையும், உம்ரன் மாலிக் மற்றும் ஹர்சல் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா கூறுகையில், “நாங்கள் வெற்றியை பெற்றிருக்க வேண்டிய இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தது வருத்தமளிக்கிறது. இந்த போட்டியின் இறுதி நேரத்தில் நாங்கள் தோல்வியை சாதித்தது ஏமாற்றம் அளிக்கிறது.

வான்கடே போன்ற மைதானத்தில் ஒரு பேட்ஸ்மேன் நிலைத்து நின்றால் வெற்றியை பெற்று கொடுத்திருக்க முடியும். இந்த போட்டியில் எங்களது பந்துவீச்சு மிகச்சிறப்பாக இருந்தது. அதன் காரணமாகவே இந்திய அணி சிறப்பான துவக்கத்தை பெற்றிருந்தாலும் எங்களால் இந்திய அணியை 162 ரன்களில் சுருட்ட முடிந்தது.

இருந்தாலும் இது இந்த தொடரின் முதல் போட்டி தான். இனிவரும் போட்டிகளில் நாங்கள் இன்னும் பலமாக திரும்பி வெற்றிப்பாதைக்கு திரும்புவோம். இந்திய அணியில் உள்ள வீரர்கள் பெரும்பாலும் இளம்வீரர்களாகவும், நல்ல பேட்டிங் வரிசை உடைய அணியாகவும் இருக்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement