
Ind vs SL: Kusal Perera set to be ruled out of limited-overs series (Image Source: Google)
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஜூலை 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவானும், பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இலங்கை அணிக்கெதிரான தொடரில் ஐபிஎல் தொடரில் கலக்கிய வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காயம் காரணமாக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குசால் பெரேரா இத்தொடரிலிருந்து விலகியுள்ளார். பயிற்யின் போது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதனை பரிசோதித்த மருத்துவர்கள், பெரேரா நிச்சயம் 8 வாரம் ஓய்வில் இருக்கு வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளனர்.