இந்திய அணியில் மேலும் ஒருவருக்கு கரோனா!
இந்திய அணியில் கரோனா பாதிப்புகள் மேலும் அதிகரித்துள்ளதால், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு சிக்கல் உருவாகியுள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட 50 ஓவர் கிரிக்கெட் தொடர் வரும் பிப்.6ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
இதற்காக 18 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அகமதாபாத்துக்கு வந்த நிலையில் தீடீரென அணி பபுளுக்குள் கரோனா பரவல் ஏற்பட்டுள்ளது.
Trending
பயோ பபுளில் இருக்கும் வீரர்களுக்கு வழக்கமாக நேற்று செய்யப்பட்ட பரிசோதனையில் ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெயிக்வாட், நவ்தீப் சைனி ஆகிய வீரர்கள் மற்றும் 3 அணி ஊழியர்கள் என மொத்தம் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அணி வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
கரோனா பரவல் ஏற்பட்ட போதும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்தது. மேலும் ரோஹித் சர்மாவுடன் ஓப்பனிங் களமிறங்குவதற்காக மயங்க் அகர்வால் அவசர அவசரமாக அணிக்குள் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போது மேலும் 2 வீரர்களுக்கு கரோனா உறுதியாகியுள்ளது. அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் அக்ஸர் படேலுக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து இந்திய அணியின் இன்றைய நாள் பயிற்சி முகாம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. மேலும் முதல் ஒருநாள் போட்டியும் தடைபடும் சூழல் உருவாகியுள்ளது.
முன்னதாக இன்று காலை இதுகுறித்து பேசியிருந்த பிசிசிஐ மூத்த அதிகாரி, இன்று மேலும் கரோனா பாதிப்பு உறுதியானால், முதல் போட்டியை வேறு ஒருநாளுக்கு ஒத்திவைக்கப்படும் எனத்தெரிவித்திருந்தார். அதன்படி, தற்போது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துடன் பிசிசிஐ அவசர ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now