IND vs WI: India U19 World Cup Winning Team In Attendance To Watch The 2nd ODI (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றது. கோப்பை வென்ற இந்திய அணி செவ்வாய்க்கிழமை காலை பெங்களூரு வந்தடைந்தது. பிறகு, இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறும் ஆமதாபாத் வந்தடைந்தனர்.
தற்போது இந்திய அண்டர் 19 வீரர்கள், மைதானத்துக்கு வந்து ஒருநாள் ஆட்டத்தைப் பார்வையிட்டு வருகின்றனர். உடன் தலைமைப் பயிற்சியாளர் ரிஷிகேஷ் கனிட்கர் மற்றும் அணியின் உதவியாளர்களும் இருந்தனர்.
அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் பயணித்த தேசிய கிரிக்கெட் அகாடெமி தலைவர் விவிஎஸ் லக்ஷ்மனும் இருந்தார். இதுதவிர பிசிசிஐ செயலர் ஜெய் ஷா, பொருளாளர் அருண் துமல் மற்றும் மாநில கிரிக்கெட் சங்க அதிகாரிகள் இருந்தனர்.