
கடந்த 2015 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தன்னுடைய முதல் ஐபிஎல் போட்டியை விளையாட ஆரம்பித்த தீபக் ஹூடா, அடுத்தடுத்து தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாக திகழ்ந்தார்.
இருந்த போதும் இவருக்கு நீண்ட ஆண்டுகளாகவே இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. பின் 2021 ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இவரை இனிமேலும் புறக்கணிக்க முடியாது என்ற நிலை வந்ததால், இவரை 2022பிப்ரவரி மாதம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
அதனை சிறப்பாக பயன்படுத்திய தீபக் ஹூடா, தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி, தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை இந்த கிரிக்கெட் உலகத்திற்கு தெரியப்படுத்தினார். மேலும் அதற்கு பின் நடைபெற்ற 2022 ஐபிஎல் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் தனக்கான ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.