Advertisement

கேஎல் ராகுலுக்கு மாற்று வீரராக சஞ்சு சாம்சன்!

கரோனா தொற்று காரணமாக வீண்டீஸ் அணியுடனான டி.20 தொடரில் இருந்து விலகிய கே.எல் ராகுலுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Advertisement
 IND vs WI: Sanju Samson Added To India T20I Squad As KL Rahul’s Replacement
IND vs WI: Sanju Samson Added To India T20I Squad As KL Rahul’s Replacement (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 29, 2022 • 01:18 PM

வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
July 29, 2022 • 01:18 PM

இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய நிலையில் இரு அணிகள் இடையேயான டி20 தொடர் இன்று துவங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று இரவு  பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற உள்ளது.

Trending

இந்தநிலையில், கரோனா தொற்று காரணமாக விண்டீஸ் அணியுடனான டி.20 தொடரில் இருந்து விலகிய கே.எல் ராகுலுக்கு பதிலாக இளம் வீரரான சஞ்சு சாம்சன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

காயம் காரணமாக விண்டீஸ் அணியுடனான ஒருநாள் தொடரில் விளையாடாத கே.எல் ராகுல், டி.20 தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவர் காயத்தில் இருந்து குணமடைந்து வெஸ்ட் இண்டீஸிற்கு புறப்படுவதற்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் டி.20 தொடரில் இருந்தும் விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சனுக்கு டி.20 தொடரிலும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

சஞ்சு சாம்சன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ., வெளியிடாவிட்டாலும், விண்டீஸ் அணியுடனான டி20 தொடருக்கான இந்திய வீரர்களின் பெயர் பட்டியலில் சஞ்சு சாம்சனின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. ரிஷப் பண்ட், இஷான் கிஷன், தினேஷ் கார்த்திக் என மூன்று விக்கெட் கீப்பர்கள் ஏற்கனவே அணியில் இருக்கும் நிலையில், சஞ்சு சாம்சனிற்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்றே தெரிகிறது.

டி 20 தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஸ்ரேயஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், ரவிச்சந்திர அஸ்வின், ரவி பிஸ்னோய், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், ஆவேஸ் கான், ஹர்சல் பட்டேல், அர்ஸ்தீப் சிங்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement