
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 29ஆம் தேதி தொங்கி நடைபெற்ற முதல் போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து இராண்டவது போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போட்டி செயிண்ட் கிட்ஸ் தீவில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெற விருந்தது. இந்நிலையில் போட்டி துவங்குவதற்கு ஒரு மணி நேரம் மட்டுமே இருந்த நிலையில், போட்டிக்கான நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
இதையடுத்து தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ரவி பிஸ்னோய்க்கு பதிலாக ஆவேஷ் கான் சேர்க்கப்பட்டுள்ளார்.