
இந்தியா, இங்கிலாந்து இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் இந்திய அணி பேட்டர் ஸ்ரேயஸ் ஐயர், வேகப்பந்து வீச்சுக்கு எதிராக படுமோசமாக திணறினார். பௌலர் பவுன்சர்தான் வீசப் போகிறார் என்பதை தெரிந்தும், அதற்கேற்றாற்போல் கால்களை நகர்த்தி நின்றும் ஷ்ரேயஸ் ஐயரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. ஸ்பின்னர்களுக்கு எதிராக மட்டுமே சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார்.
இதனால் இவருக்கு இனி தொடர்ந்து வாய்ப்பு வழங்க கூடாது. மாற்று வீரரை களமிறக்குவதுதான் நல்லது என பலர் கோரிக்கை விடுக்க ஆரம்பித்தார்கள். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷ்ரேயஸ் ஐயர் களமிறக்கப்படவில்லை. ஓரங்கட்டப்பட்டார். இதனால், இனி இவருக்கு வாய்ப்பு கிடைக்காது எனக் கருதப்பட்ட நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷ்ரேயஸ் ஐயருக்கு இடம் கிடைத்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் பௌலர்கள் சிறப்பான முறையில் பவுன்சர்களை வீசுவார்கள் என்பதால், ஷ்ரேயஸ் ஐயர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் முதல் போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் களமிறக்கப்பட்டார். மிடில் ஓவர்களின்போது களமிறங்கிய அவருக்கு எதிர்பார்த்தபடியே பௌலர்கள் தொடர்ந்து ஷார்ட் பால்களை வீசி மிரட்டினார்கள்.