Advertisement

ஜிம்பாப்வே vs இந்தியா, இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Advertisement
ஜிம்பாப்வே vs இந்தியா, இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே vs இந்தியா, இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 06, 2024 • 10:45 PM

Zimbabwe vs India, 2nd T20I Dream11 Prediction: ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அசத்தியுள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இந்திய அணி முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளதன் காரணமாக இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாத்தில் களமிறங்கும். அதேசமயம் ஜிம்பாப்வே அணி தங்களுடையை வெற்றியை தக்கவைக்க போராடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.  

Bharathi Kannan
By Bharathi Kannan
July 06, 2024 • 10:45 PM

ZIM vs IND 2nd T20I: போட்டி தகவல்கள்

Trending

  • மோதும் அணிகள் - ஜிம்பாப்வே vs இந்தியா
  • இடம் - ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானம், ஹராரே
  • நேரம் - ஜூலை 07, மாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)

ZIM vs IND 2nd T20I Pitch Report

ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை 50 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெறுள்ளன. இதில் இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணியானது 29 முறையும், சேஸிங் செய்யும் அணி 20 முறையும் வெற்றியைக் கண்டுள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 152 ரன்களாக இருந்துள்ளது. அதேசமயம் இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 229 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

ZIM vs IND T20I Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 09
  • இந்தியா - 06
  • ஜிம்பாப்வே - 03

ZIM vs IND T20I: Where to Watch?

ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் கிரிக்கெட் ரசிகர்கள் இந்தத் தொடரை ஓடிடி தளத்தில் அனுபவிக்க விரும்பினால், அவர்கள் சோனி லைவ் செயலியில் குறிப்பிட்ட சந்தாவை செலுத்தி தொடரை பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Zimbabwe vs India 2nd T20I Probable Playing XI

இந்தியா உத்தேச லெவன்: ஷுப்மான் கில், அபிஷேக் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ரியான் பராக், துருவ் ஜூரல், ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், அவேஷ் கான், முகேஷ் குமார், ரவி பிஷ்னோய், கலீல் அகமது.

ஜிம்பாப்வே உத்தேச லெவன்: வெஸ்லி மதேவெர, இன்னசென்ட் கையா, பிரையன் பென்னட், சிக்கந்தர் ரஸா (கே), தியான் மேயர்ஸ், ஜானதன் காம்ப்பெல், கிளைவ் மடாண்டே, வெலிங்டன் மஸகட்ஸா, லூக் ஜாங்வே, பிளெஸிங் முசரபானி, டெண்டாய் சதாரா

ZIM vs IND 2nd T20I Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - துருவ் ஜூரல்
  • பேட்ஸ்மேன்கள் - ரிங்கு சிங், ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), வெஸ்லி மதேவெர
  • ஆல்ரவுண்டர் - சிக்கந்தர் ரஸா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், பிரையன் பென்னட்
  • பந்துவீச்சாளர்கள் - முகேஷ் குமார், பிளெஸிங் முசரபானி, ரவி பிஷ்னோய்,டெண்டாய் சதாரா

ZIM vs IND 2nd T20I Dream11 Prediction, Today Match ZIM vs IND, ZIM vs IND Dream11 Team, Fantasy Cricket Tips, ZIM vs IND Pitch Report, Today  Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between India vs Zimbabwe

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement