Advertisement

ஜிம்பாப்வே vs இந்தியா, நான்காவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஜிம்பாப்வே மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியானது நாளை ஹராரேவில் நடைபெறவுள்ளது.

Advertisement
ஜிம்பாப்வே vs இந்தியா, நான்காவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே vs இந்தியா, நான்காவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 12, 2024 • 07:47 PM

Zimbabwe vs India, 4th T20I Dream11 Prediction: ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றிபெற்ற நிலையி, அடுதடுத்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியும் வெற்றியைப் பதிவுசெய்து டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டியானது நாளை ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால் இப்போட்டியாக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
July 12, 2024 • 07:47 PM

ZIM vs IND 4th T20I: போட்டி தகவல்கள்

Trending

மோதும் அணிகள் - ஜிம்பாப்வே vs இந்தியா
இடம் - ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானம், ஹராரே
நேரம் - ஜூலை 13, மாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)

ZIM vs IND 4th T20I Pitch Report

ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை 53 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெறுள்ளன. இதில் இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணியானது 31 முறையும், சேஸிங் செய்யும் அணி 20 முறையும் வெற்றியைக் கண்டுள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 152 ரன்களாக இருந்துள்ளது. அதேசமயம் கடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது 234 ரன்களைக் குவிக்கப்பட்டதே, இந்த மைதானத்தின் அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. இதன் காரணமாக டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

ZIM vs IND T20I Head to Head Record

மோதிய போட்டிகள் - 11
இந்தியா - 08
ஜிம்பாப்வே - 03

ZIM vs IND T20I: Where to Watch?

ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் கிரிக்கெட் ரசிகர்கள் இந்தத் தொடரை ஓடிடி தளத்தில் அனுபவிக்க விரும்பினால், அவர்கள் சோனி லைவ் செயலியில் குறிப்பிட்ட சந்தாவை செலுத்தி தொடரை பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Zimbabwe vs India 4th T20I Probable Playing XI

இந்தியா உத்தேச லெவன்: ஷுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ஷிவம் தூபே, வாஷிங்டன் சுந்தர், அவேஷ் கான், கலீல் அஹ்மத், ரவி பிஷ்னோய்.

ஜிம்பாப்வே உத்தேச லெவன்: வெஸ்லி மதேவெர, தடிவானாஷே மருமணி, பிரையன் பென்னட், சிக்கந்தர் ரஸா (கே), தியான் மேயர்ஸ், ஜானதன் காம்ப்பெல், கிளைவ் மடாண்டே, வெலிங்டன் மஸகட்ஸா, ரிச்சர்ட் ந்ங்கரவா, பிளெஸிங் முசரபானி, டெண்டாய் சதாரா

ZIM vs IND 3rd T20I Dream11 Team

விக்கெட் கீப்பர் - சஞ்சு சாம்சன் (கேப்டன்)
பேட்ஸ்மேன்கள் - ஆபிஷேக் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட் , வெஸ்லி மதேவெர
ஆல்ரவுண்டர் - சிக்கந்தர் ரஸா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், பிரையன் பென்னட்
பந்துவீச்சாளர்கள் - ஆவேஷ் கான், பிளெஸிங் முசரபானி, ரவி பிஷ்னோய்,டெண்டாய் சதாரா

ZIM vs IND 4th T20I Dream11 Prediction, Today Match ZIM vs IND, ZIM vs IND Dream11 Team, Fantasy Cricket Tips, ZIM vs IND Pitch Report, Today  Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between India vs Zimbabwe

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement