Advertisement

INDW vs AUSW, Only Test: ஸ்மிருதி, ரிச்சா, ஜெமிமா, தீப்தி அரைசதம்; வலிமையான நிலையில் இந்தியா!

ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களைக் குவித்துள்ளது.

Advertisement
INDW vs AUSW, Only Test: ஸ்மிருதி, ரிச்சா, ஜெமிமா, தீப்தி அரைசதம்; வலிமையான நிலையில் இந்தியா!
INDW vs AUSW, Only Test: ஸ்மிருதி, ரிச்சா, ஜெமிமா, தீப்தி அரைசதம்; வலிமையான நிலையில் இந்தியா! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 22, 2023 • 07:53 PM

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய மகளிர் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி  மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
December 22, 2023 • 07:53 PM

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய மகளிர் அணி 219 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் பூஜா வஸ்திரேகர் 4 விக்கெட்டுகளையும், ஸ்நே ரானா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Trending

இதையடுத்து தங்களது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு ஷஃபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷஃபாலி வர்மா 8 பவுண்டரிகளுடன் 40 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய மகளிர் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 98 ரன்களைச் சேர்த்துள்ளது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஸ்மிருதி மந்தனா 43 ரன்களுடனும், ஸ்நே ரானா 4 ரன்களுடனும் தொடர்ந்தனர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஸ்மிருதி மந்தனா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

அதன்பின் 12 பவுண்டரிகளுடன் 74 ரன்களை விளாசியிருந்த ஸ்மிருதி மந்தனா ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து ஸ்நே ரானா 9 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ரிச்சா கோஷ் - ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். 

பின் 52 ரன்கள் எடுத்திருந்த ரிச்சா கோஷ் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்மன்பரீத் கவுர் ரன்கள் ஏதுமின்றியும், யஷ்திகா பாட்டியா ஒரு ரன்னிலும் என ஆட்டமிழக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸும் 73 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த தீப்தி சர்மா - பூஜா வஸ்திரேகர் இணை அபாரமாக செயல்பட்டு ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.

தொடர்ந்து அபாரமாக விளையாடிய தீப்தி சர்மா அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 376 ரன்களை குவித்தது. இதில் தீப்தி சர்மா 70 ரன்களுடனும், பூஜா வஸ்திரேகர் 33 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆஷ்லே கார்ட்னர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 157 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி நாளை 3ஆம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement