
INDW vs AUSW, 1st T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிஸ்ப்! (Image Source: Google)
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய மகளிர் அணியை ஒயிட்வாஷ் செய்ததுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. ஏற்கெனவே இந்திய மகளிர் அணி ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆகியுள்ளதால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இத்தொடரை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்திய மகளிர் vs ஆஸ்திரேலிய மகளிர்
- இடம் - டி ஒய் பாட்டில் மைதானம், நவி மும்பை
- நேரம் - இரவு 7 மணி (இந்திய நேரப்படி)