
India Women vs South Africa Women, 3rd ODI Dream11 Prediction: தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மாற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரை இந்திய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி தென் ஆப்பிரிக்க அணியை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியானது நாளை நடைபெறவுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. மேலும் இப்போட்டிக்கு ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
IND W vs SA W: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர்
- இடம் - எம் ஏ சிதம்பரம் மைதானம், சென்னை
- நேரம் - ஜூன் 28, காலை 9.30 மணி
IND W vs SA W: Pitch Report
சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் வரலாற்றில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சொர்கபுரியாக திகழ்ந்து வருகிறது. இதுவரை இங்கு மொத்தம் 35 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன, அதில் 12முறை முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோரானது 340 ரன்களாகவுள்ளது. இதனால் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
IND W vs SA W: Head-to-Head
- மோதிய போட்டிகள் - 02
- இந்திய மகளிர் அணி - 02
- தென் ஆப்பிரிக்க மகளிர் அணி - 00
- முடிவில்லை - 00