
India Women vs Sri Lanka Women, Final, Dream11 Prediction: இலங்கையில் நடைபெற்று வரும் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் அரையிறுதி சுற்றுக்கு குரூப் ஏ பிரிவில் இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளும், குரூப் பி பிரிவில் இருந்து இலங்கை மற்றும் வங்கதேச அணிகளும் முன்னேறின. இதில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணியும், பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. அதன்படி நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரு அணியிலும் நட்சத்திர வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
IND W vs SL W: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்தியா மகளிர் vs இலங்கை மகளிர்
- இடம் - ரங்கிரி தம்புளா சர்வதேச மைதானம், தம்புளா
- நேரம் - ஜூலை 28, இரவு 7 மணி (இந்திய நேரப்படி)
IND W vs SL W: Pitch Report
இந்தியா - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான இப்போட்டி ரங்கிரி தம்புளா சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 144 ரன்களாக உள்ளன. இதனால் இந்த மைதானத்தில் பேட்டர்கள் ரன்களைச் சேர்க்க விரும்புவார்கள் என்பதால் நிச்சயம் பொட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணியானது முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.