
IND Women's team Squad for England tour (Image Source: Google)
இந்திய மகளிர் அணி வருகிற ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய மகளிர் அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. இதில் இளம் வீராங்கனை ஷபாலி வர்மா, இந்திய டெஸ்ட் அணிக்காக வாய்ப்பை பெற்றுள்ளார். அதேசமயம் ஷிகா பாண்டே, தனியா பாட்டியா ஆகியோரும் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளனர்.
இதன் படி நான்கு டெஸ்ட் போட்டி ஜூன் 16ஆம் தேதியும்,மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூன் 27 தேதி முதலும், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் ஜூலை 9ஆம் தேதி முதல் தொடங்குகிறது.