
India A vs UAE Dream11 Prediction, Emerging Teams Asia Cup: ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் நடத்தப்படும் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை டி20 தொடரின் நடப்பு சீசன் ஓமனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரானது இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 8ஆவது லீக் போட்டியில் இந்தியா ஏ மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் இந்திய அணி தங்கள் முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரக அணியும் முதல் போட்டியில் ஓமன் அணிக்கு எதிரான அபார வெற்றிக்கு பிறகு இப்போட்டியை எதிகொள்ளவுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
IND A vs UAE: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்தியா vs ஐக்கிய அரபு அமீரகம்
- இடம் - அல் அமேரத் கிரிக்கெட் மைதானம், அல் அமேரத்
- நேரம் - அக்.21 இரவு 7.00 மணி (இந்திய நேரப்படி)