Advertisement
Advertisement
Advertisement

BANA vs INDA: சௌரப், முகேஷ் குமாரின் அபார பந்துவீச்சில் இந்தியா ஏ அபார வெற்றி!

வங்கதேச ஏ அணிக்கெதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட்டில் இந்திய ஏ அணி இன்னிங்ஸ் மற்றும் 123 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan December 09, 2022 • 17:48 PM
India A bowlers were on a roll on the final day as they skittled out Bangladesh!
India A bowlers were on a roll on the final day as they skittled out Bangladesh! (Image Source: Google)
Advertisement

இந்திய ஏ அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து இரு அதிகாரபூர்வமற்ற டெஸ்டுகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் டிரா ஆனது. 2ஆவது டெஸ்ட் போட்டி கடந்த 6ஆம் தேதி சில்ஹட்டில் தொடங்கியது. இந்திய ஏ அணியின் தலைமைப் பயிற்சியாளராக செளராஷ்டிர முன்னாள் வீரர் ஷிதான்சு கொடாக்கும் டிராய் கூலி, வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் டி. திலீப்,ஃபீல்டிங் பயிற்சியாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

இப்போட்டியில் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமாரின் அபாரமான பந்துவீச்சில் வங்கதேச பேட்டர்கள் தடுமாறினார்கள். ஷஹாதத் ஹுசைன், ஜேக்கர் அலி மட்டும் நன்கு விளையாடி முறையே 80, 62 ரன்கள் எடுத்தார்கள். 

Trending


இதனால் வங்கதேச ஏ அணி, 80.5 ஓவர்களில் 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பெங்காலைச் சேர்ந்த 29 வயது முகேஷ் குமார் 6 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ், ஜெயந்த் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள்.

அதன்பின் இந்திய ஏ அணி, 2ஆவது நாள் முடிவில் 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் எடுத்தது. கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 144, ஜெயந்த் யாதவ் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இதையடுத்து நேற்று நடைபெற்ற மூன்றாம் ஆட்டத்தில் , அபிமன்யு ஈஸ்வரன், 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இந்திய ஏ அணியின் கீழ்நடுவரிசை மற்றும் கீழ்வரிசை பேட்டர்கள் அபாரமாக விளையாடி இந்திய அணி 550 ரன்களைத் தாண்ட உதவினார்கள். ஜெயந்த் யாதவ் 83, செளரப் குமார் 55, நவ்தீப் சைனி 50, முகேஷ் குமார் 23 ரன்கள் எடுத்தார்கள். இதன்மூலம் இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் 147.1 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 562 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச ஏ அணியில் சத்மான் இஸ்லாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடக்க, மற்ற வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சத்மான் இஸ்லாமும் 93 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.

இதனால் வங்கதேச ஏ அணி 187 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் சௌரப் குமார் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் இந்திய ஏ அணி இன்னிங்ஸ் மற்றும் 123 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றுள்ளது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement