
வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில், வங்கதேச அணி கடைசிவரை போராடி, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியிலும் தொடர்ச்சியாக 6 விக்கெட்களை இழந்தபோதும், அதன்பிறகு மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து வங்கதேச அணி 271 ரன்ளை குவித்து, இறுதியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்று, தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, தீபக் சஹார் ஆகியோர் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால் அவர்களுக்கு மாற்றாக வீரர்களை களமிறக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது.
ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியைத் தழுவி ஒருநாள் தொடரை இழந்துள்ளது. இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது ரோஹித் ஷர்மா, தீபக் சஹார் ஆகியோர் காயமடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளதால்ம் தற்போது அவர்களுக்கு மாற்றாக வீரர்களை களமிறக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது.