
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி துவங்கிய 15ஆவது ஆசியக்கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் என ஆறு அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்து அடுத்த சுற்றிற்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் தகுதி பெற்றுள்ளன.
நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் ஹாங்காங் அணியை 155 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணியானது “சூப்பர் 4” சுற்றுக்கு தகுதி பெற்றது. அடுத்ததாக இந்த அடுத்த சுற்றில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை ஞாயிற்றுக்கிழமை துபாய் மைதானத்தில் சந்திக்கிறது. மற்றொரு போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று விளையாட இருக்கின்றன.
இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்த பின்னர் அடுத்ததாக இந்திய அணிக்கு எதிராக மோத இருக்கும் ஆட்டம் குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் துவக்க வீரரான முகமது ரிஸ்வான் கூறுகையில், “ஷார்ஜா ஆடுகளத்தில் பவர்பிளே ஓவர்களிலேயே 60 ரன்கள் வரை அடிக்க முடியும் என்பதை கணக்கு செய்தே விளையாடினோம். அதன்படி இந்த போட்டியில் விளையாடி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. ஆனால் அடுத்ததாக இந்தியா பாகிஸ்தான் மோதப்போகும் போட்டிதான் எனக்கு மிகவும் முக்கியமானது. அனைத்து வீரர்களுக்குமே அது ஒரு அழுத்தம் மிகுந்த போட்டியாக இருக்கும்.