
India Announces Home Schedule With Series Against Sri Lanka, New Zealand & Australia (Image Source: Google)
இந்திய கிரிக்கெட் அணியின் வங்கதேச சுற்றுப்பயணம் டிசம்பர் 26 அன்று நிறைவுபெறுகிறது. இதன்பிறகு இந்திய அணி ஐபிஎல் தொடருக்கு முன்னதாக இந்தியாவில் 9 ஒருநாள், 6 டி20, 4 டெஸ்டுகளில் விளையாடவுள்ளது.
அதன்படி 2023 ஜனவரி 3 முதல் ஜனவரி 15 வரை இலங்கைக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளிலும், ஜனவரி 18 முதல் பிப்ரவரி 1 வரை நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிப்ரவரி 9 முதல் மார்ச் 22 வரை 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் பொட்டிகளிலும் இந்திய அணி விளையாடவுள்ளது.
இந்த அனைத்து ஆட்டங்களிலும் கடைசியாக நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட், சென்னையில் நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை.