
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள இரண்டு போட்டிகளில்ன் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் சமனில் வைத்துள்ளன. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது ஹராரேவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் முதலிடத்திலும், இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து அணியின் பில் சால்ட் மூன்றாம் இடத்திலும், பாகிஸ்தானின் பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர்.
இந்நிலையில் ஜிம்பாப்வே தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வட் 13 இடங்கள் முன்னேறி 07ஆம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். இதன்மூலம் டாப் 10 இடத்தைப் பிடித்துள்ள இரண்டாவது வீரர் எனும் பெருமையையும் கெய்க்வாட் பெற்றுள்ளார். அதேபோல் இந்திய அணியின் அதிரடி ஃபினிஷர் ரிங்கு சிங் 4 இடங்கள் முன்னேறி 39ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.