டி20 உலகக்கோப்பை: ஆஸியை பந்தாடியது இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் அடித்து கைக்கொடுத்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களைச் சேர்த்தது.
Trending
இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 57 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கேல் ராகுல் - ரோஹித் சர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் ராகுல் 39 ரன்களில் ஆட்டமிழக்க, ரோஹித் 60 ரன்களுடன் களத்தை விட்டு வெளியேறினார்.
அதன்பின் விளையாடிய சூர்யகுமார் யாதவ் - ஹர்திக் பாண்டியா இணை இறுதிவரை நின்று ஆட்டத்தை முடித்துக் கொடுத்தனர்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இதன்மூலம் 17.5 ஓவர்களிலேயே இந்திய அணி இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
Win Big, Make Your Cricket Tales Now