
India Can Win In England If Other Batsmen Make Runs Around Virat Kohli: Ravichandran Ashwin (Image Source: Google)
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி ஜூன் 18ஆம் தேதி சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது.
அதையடுத்து ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் செப்டம்பர் 14ஆம் தேதி வரை ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தை எதிர்த்து இந்திய அணி விளையாடுகிறது. இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி பெரிய அளவில் சாதித்தது கிடையாது. கடந்த சீசனில் விராட் கோலி சிறப்பாக விளையாடினாலும், இறுதியில் தொடரை 1-4 என இழந்தது.
தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இத்தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி ஆர்வம்காட்டி வருகிறது. ஆனால் இங்கிலாந்தில் சாதிக்க வேண்டும் என்றால் விராட் கோலியுடன் மற்ற பேட்ஸ்மேன்கள் ஒட்டிக்கொண்டு ரன்கள் குவிக்க வேண்டும் என அஸ்வின் தெரிவித்துள்ளார்.