Advertisement

WI vs IND, 2nd ODI: அக்ஸரின் அதிரடி அரைசதம்; த்ரில் வெற்றியுடன் தொடரை வென்றது இந்தியா!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.

Advertisement
India Clinches ODI Series After Winning Second Match Against West Indies
India Clinches ODI Series After Winning Second Match Against West Indies (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 25, 2022 • 10:58 AM

வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிகோலஸ் பூரன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
 
 ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய தொடக்க வீரர் ஷாய் ஹோப்புடன் 4ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் பூரன் சிறப்பாக பேட்டிங் ஆடினார்.  அரைசதம் அடித்த பூரன் 77 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களுடன் 74 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 
 
மிகச்சிறப்பாக பேட்டிங் சேய்த ஷாய் ஹோப் சதமடித்தார். ஹோப்பும் பூரனும் இணைந்து 4ஆவது விக்கெட்டுக்கு 117 ரன்களை குவித்தனர். சதமடித்த ஹோப் 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஹோப்பின் சதம், பூரனின் அரைசதம் மற்றும் மற்ற வீரர்களின் சிறு சிறு பங்களிப்பால் 50 ஓவரில் 311  ரன்களை குவித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.
 
இதையடுத்து 312 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ஷிகர் தவான் மிக மந்தமாக பேட்டிங் ஆடி 31 பந்தில் 13 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஷுப்மன் கில் 43 ரன்கள் அடித்தார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
July 25, 2022 • 10:58 AM

3ஆம் வரிசையில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் இந்த போட்டியிலும் அரைசதம் அடித்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 63 ரன்கள் அடித்தார். ஆனால் சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியிலும் வெறும் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.  சஞ்சு சாம்சன் சிறப்பாக பேட்டிங் செய்து அரைசதம் அடித்தார். அதிரடியாக ஆடிய சாம்சன் 51 பந்தில் 54 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, தீபக் ஹூடாவும் 33 ரன்னில் வெளியேற, 44.1 ஓவரில் 256 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. 

Trending

அதன்பின்னர் களமிறங்கிய அக்ஸர் படேல், காட்டடி அடித்து பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அரைசதம் அடித்தார். 35 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 64 ரன்களை குவித்து இந்திய அணியை வெற்றி பெற செய்தார். 

அக்ஸர் படேலின் அதிரடி அரைசதத்தால் கடைசி ஓவரின் 4ஆவது பந்தில் இலக்கை எட்டிய இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், 2-0 என ஒருநாள் தொடரை வென்றது.
 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement