Advertisement

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லும் - டிம் பெய்ன் நம்பிக்கை!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிசெல்லும் என ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெயின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

Advertisement
India comfortably won NZ in WTC says Tim Paine
India comfortably won NZ in WTC says Tim Paine (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 15, 2021 • 08:48 AM

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. கிரிக்கெட் உலகம் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த போட்டி குறித்து பல்வேறு முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் தங்களது பேவரைட் அணிகளை தேர்வு செய்து வருகின்றனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan
June 15, 2021 • 08:48 AM

இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிசெல்லும் என ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெயின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

Trending

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய டிம் பெய்ன், “இந்திய அணி கிட்டத்தட்ட அவர்களது சிறப்பான ஆட்டத்தை நெருங்கிய படி விளையாடி விட்டால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை எளிதில் வென்றுவிடும்.

அதற்காக நியூசிலாந்து ஒன்று எளிதில் வெல்லக்கூடிய அணி என்று அர்த்தமல்ல. அவர்களும் சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.” என தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement