
Full ICC Women’s T20 World Cup 2026 Schedule: அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஜூன் 14ஆம் தேதி பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இதில் 12 அணிகளும் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு இத்தொடர் நடைபெறவுள்ளாது. இதில் குருப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க், இந்தியா, பாகிஸ்தான் அணிகளும், குருப் பி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை அணிகளும் இடம்பிடித்துள்ளன. மற்ற அணிகள் தகுதிச்சுற்று அடிபடையில் தேர்வு செய்யப்படவுள்ளன.
இந்நிலையில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. மொத்தம் 33 போட்டிகள் கொண்ட தொடரானது ஜூன் 12 ஆம் தேதி எட்ஜ்பாஸ்டனில் தொடங்கும் நிலையில், இறுதிப் போட்டி ஜூலை 5 ஆம் தேதி லார்ட்ஸில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து முதல் அரையிறுதி போட்டி ஜூன் 30ஆம் தேதியும், இரண்டாவது அரையிறுதி போட்டி ஜூலை 2ஆம் தேதியும் ஓவலில் நடைபெறவுள்ளது.