Advertisement

ஸ்லோ ஓவர் ரேட்: இந்திய அணிக்கு அபராதம்!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan July 05, 2022 • 22:09 PM
India Fined 40 Percent Of Match Fees; Penalized Two WTC Points For Slow Over-Rate Against England
India Fined 40 Percent Of Match Fees; Penalized Two WTC Points For Slow Over-Rate Against England (Image Source: Google)
Advertisement

இந்தியா - இங்கிலாந்து இடையே ஒத்திவைக்கப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கி நடந்தது. இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா கரோனா காரணமாக ஆடாததால் ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டன்சி செய்தார். 

எட்ஜ்பாஸ்டனில் நடந்த இந்த டெஸ்ட் போட்டியில் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் ஜோ ரூட் ஆகியோரது அபாரமான ஆட்டத்தின் காரணமாக இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

Trending


இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பிட்ட நேரத்தைக் காட்டிலும் அதிகமான நேரம் எடுத்துக்கொண்டு பந்து வீசியதால் இந்திய அணிக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 40 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்திய அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியளிலும் 2 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement