
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 25ஆம் தேதி லீட்ஸில் உள்ள ஹெட்டிங்லே மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 78 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்து சொதப்பியது. இந்தியாவை தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியில் ஓபனர்கள் ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீத் ஆகியோர் சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். ஆட்டத்தின் முதல் பந்து முதலே சீரான வேகத்தில் ரன்களை அவர்கள் குவித்ததால் இங்கிலாந்து அணி 100 ரன்களை எளிதாக கடந்தது.
பின்னர் நேற்று நடைபெற்ற 2வது நாள் ஆட்டத்தில் ரோரி பேர்ன்ஸ் 61 ரன்களுக்கும், ஹசீப் 68 ரன்களுக்கும் வெளியேறினர். இந்த ஜோடியை முகமது ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா பிரித்தனர். அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் சதமடித்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.