
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. இதன் காரணமாக தற்போது நடைபெற்று வரும் நான்காவது போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த போட்டியில் விளையாடிய முன்னணி வீரர்கள் பலரும் சொதப்பிய நிலையில் துணை கேப்டன் ரஹானே மீது பெரிய அளவு விமர்சனம் எழுந்துள்ளது. ஏனெனில் கடைசியாக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அரைசதம் அடித்த ரஹானே மற்றபடி இந்த தொடரில் பெரிய அளவு ரன்களை குவிக்கவில்லை. மொத்தம் ஆறு இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ள அவர் 109 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.
இதன் காரணமாக அவர் அணியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் பெரிய அளவில் எழுந்துள்ளன. தற்போது நடைபெற்று வரும் 2 ஆவது இன்னிங்சிலும் ரஹானே டக் அவுட் ஆகியுள்ளார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா, ரஹானேவுக்கு பதில் ஹனுமா விஹாரி அல்லது சூர்யகுமார் யாதவிற்கு ஏன வாய்ப்பு வழங்கவில்ல என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.