
இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக தயாராகி வருகிறது. இந்த போட்டி இங்கிலாந்தில் வரும் ஜூன் 18ஆம் தேதி தொடங்குகிறது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டி என மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக சமீபத்தில் நடந்த அனைத்து தொடர்களிலும் இளம் வீரர்களை கொண்டு வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இதற்கு காரணம் விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரியின் சரியான காம்போ தான் எனக்கூறப்படுகிறது.
இந்திய அணிக்கு இதற்கு முன்னதாக அனில் கும்ப்ளே பயிற்சியாளராக இருந்தார். ஆனால் அவருடன் கோலிக்கு சரியான புரிதல் ஏற்படவில்லை. ஆனால் அடுத்து வந்த ரவி சாஸ்திரியுடன் கோலி நல்ல காம்போவாக மாறிவிட்டார். இதற்கு உதாரணம், கடந்த 2019ஆம் ஆண்டு ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிந்த பிறகும் கூட அவரையே மீண்டும் பயிற்சியாளராக நீட்டிக்க வேண்டும் என கோலி பரிந்துரைத்தார்.