
India Likely To Play 'Warm Up Match Against A County Select XI' Ahead Of England Tests (Image Source: Google)
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் திவீரமாக நடைபெற்று வரும் சூழலில் இந்திய வீரர்களுக்காக பிசிசிஐ முக்கிய கோரிக்கை ஒன்றை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் வைத்தது.
இந்த போட்டிகள் தொடங்க இன்னும் 5 வாரங்கள் உள்ளதால் இந்திய அணி வீரர்கள், இங்கிலாந்து அணியுடன் முதல் தர பயிற்சி போட்டிக்கு ஏற்பாடு செய்ய பிசிசிஐ கோரிக்கை வைத்திருந்தது.