ஒன்றாக பயணிக்கும் இந்திய ஆடவர், மகளிர் அணி!
இங்கிலாந்து சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி ஆகியவை ஒன்றாக பயணிக்கவுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்திய ஆடவர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
அதேசமயம் இந்திய மகளிர் அணியும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்நிலையில் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் இரண்டையும் ஒன்றாக இங்கிலாந்திற்கு அனுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
அதன்படி நாளை இரு அணிகளும் மும்பைக்கு சென்று, அங்கு கரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகு 14 நாள்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட உள்ளனர்.
மேலும் 14 நாள்கள் தனிமைப்படுத்த பட்ட பிறகு தனி விமானம் மூலம் இரு அணிகளையும் ஒன்றாக இங்கிலாந்து அனுப்ப உள்ளோம் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
அதேபோல் இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய அணியினர், அங்கு 10 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு பயிற்சிக்கு திரும்பும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now