ஆசிய கோப்பையை தவிர்க்கும் இந்தியா?
ஆசியக் கோப்பை தொடர் நடக்க இருக்கும் காலகட்டத்தில் பிசிசிஐ ஐந்து நாடுகளை வைத்து புதிதாக ஒரு தொடரை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் டி20 லீக் தொடரின் 16ஆவது சீசன் தற்போது இந்தியாவில் பாதிக்கட்டத்தை தாண்டி நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க இருக்கிறது
இதற்கு அடுத்து பாகிஸ்தானில் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடைபெற இருக்கும் ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி கலந்து கொள்ள வேண்டும். அரசியல் காரணங்களால் இரு அணிகளும் தனிப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்பயணங்கள் செய்யாமல் இருந்து வருகிறது. குறிப்பாக பாகிஸ்தான் தயாராக இருந்தும் இந்தியா இதற்கு தயாராக இல்லை.
Trending
எனவே பாகிஸ்தானில் நடைபெறும் ஆசியக்கோப்பையில் இந்திய அணி பங்கேற்காது என்று தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் தரப்பிலிருந்து இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்காது எனவும் அறிவிக்கப்பட்டது. பின்பு இந்திய அணிக்கான போட்டி மட்டும் பொதுவான ஒரு இடத்தில் வைத்து நடத்திக் கொள்ளலாம் என்கின்ற ஒரு யோசனை செய்யப்பட்டு இருந்தது. ஆனால் தற்பொழுது வேறொரு திட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ இருப்பதாக தெரிகிறது.
ஆசியக் கோப்பை தொடர் நடக்க இருக்கும் காலகட்டத்தில் பிசிசிஐ ஐந்து நாடுகளை வைத்து புதிதாக ஒரு தொடரை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே சமயத்தில் பிசிசிஐயின் இந்த முடிவால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் ஆசியக் கோப்பை தொடரை நடத்தாமல் விட்டுத்தர இருப்பதாகவும் தெரிய வருகிறது. எந்தெந்த ஐந்து நாடுகளை வைத்து பிசிசிஐ ஆசியக் கோப்பை காலக்கட்டத்தில் தொடரை நடத்த இருக்கிறது என்பது குறித்து இன்னும் செய்திகள் ஏதும் வெளிவரவில்லை.
Win Big, Make Your Cricket Tales Now