-mdl.jpg)
அண்டர் 19 அணிகளுக்கான ஆசிய கோப்பை தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. எட்டு அணிகள் கலந்து கொள்ளும் இந்த போட்டித் தொடரின் முதல் போட்டியில் இன்று இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசினர். இதனால் ஆqப்கானிஸ்தான் அணியின் வீரர்கள் ரன் எடுக்க முடியாமல் திணறினர். அந்த அணியின் தொடக்க வீரர் வாபியுல்லா 15 ரன்னில் ஆட்டம் இழந்தார்.அவரைத் தொடர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய சொகைல் கான் துவக்க வீரர் ஜம்ஷித் ஜத்ரானுடன் இணைந்து அணியை ஆரம்பகட்ட சரிவில் இருந்து மீட்க போராடினார்.
எனினும் அவர் 12 ரன் எடுத்து அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜம்ஷித் ஜத்ரான் 75 பந்துகளில் நான்கு பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதன் பிறகு வந்த வீரர்களில் அக்ரம் முஹம்மத் 20 ரன்னிலும், நூமான் ஷா 25 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்க 50 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 173 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் பந்துவீச்சில் ராஜ் லிம்பானி மற்றும் அர்சின் குல்கர்னி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.