
Cricket Image for இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் தொடர்? (Indian Cricket Team (Image Source: Google))
இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டதையடுத்து,
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற வாய்ப்புள்ளதாகத்
தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அலுவவர் ஒருவர் கூறுகையில், "இந்தியாவுடன்
கிரிக்கெட் தொடரில் விளையாடத் தயாராக இருக்கும்படி பாகிஸ்தான் வாரியம்
கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால், இதுகுறித்து இந்தியா எந்த ஒரு உறுதியையும் அளிக்கவில்லை.
கிரிக்கெட் தொடரில் விளையாடுவது குறித்து பிசிபியிடம் இந்தியாவிலிருந்து யாரும் நேரடியாக
ஆலோசனையில் ஈடுபடவில்லை. இருப்பினும் எங்கள் அணி வீரர்கள் தயாராக இருக்கும்படி
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது" என்றார்.