IND vs ENG, 3rd T20I: பிளேயிங் லெவனில் ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா?
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் விளையாடும் இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்சமயம் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவிலும் இந்திய அணியானது அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இத்தொடரிலும் 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி இன்று (ஜனவரி 28) ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் இந்திய அணி ஏற்கெனவே முதலிரண்டு போட்டியில் வென்றுள்ளதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ள உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.
Trending
மறுபக்கம் முந்தைய தோல்விகளுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இங்கிலாந்து அணி இப்போட்டியில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அணியில் அந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக நீண்ட நாள்களுக்கு பிறகு இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ள முகமது ஷமிக்கு இப்போட்டியில் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. ஒருவேளை ஷமி அணியில் சேர்க்கப்படும் பட்சத்தில் ரவி பிஷ்னோய் அல்லது வாஷிங்டன் சுந்தருக்கு இப்போட்டியில் ஓய்வளிக்கப்படும்.
அதேசமயம், இப்போட்டிக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக ஷிவம் தூபே, ரமந்தீப் சிங் அணியில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இப்போட்டிக்கான பிளேயிங் லெவனிலும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலா. ஒருவேளை இவர்களில் யாரெனும் ஒருவர் பிளேயிங் லெவனில் தேர்வு செய்யபடும் பட்சத்தில் துருவ் ஜுரெல் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் கணிக்கப்பட்ட லெவன்: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ராமந்தீப் சிங்/துருவ் ஜூரெல், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, முகமது ஷமி/ரவி பிஷ்னோய்.
Also Read: Funding To Save Test Cricket
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: பென் டக்கெட், பிலிப் சால்ட், ஜோஸ் பட்லர்(கே), ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேமி ஸ்மித், ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், மார்க் வுட்
Win Big, Make Your Cricket Tales Now