உலகில் எங்கு விளையாடினாலும் அங்கு இவர்கள் தான் ராஜா - இந்திய பந்துவீச்சாளர்களை புகழும் வாக்னர்!
இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எங்கு சென்றாலும் அவர்கள் தங்களது திறனை வெளிப்படுத்துவர் என நியூசிலாந்து நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் நெய்ல் வாக்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி ஜூன் 18ஆம் தேதி ஹாம்ப்ஷையரில் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணி ஜூன் 2ஆம் தேதி இங்கிலாந்து செல்லவுள்ளது.
அதேசமயம் நியூசிலாந்து அணியும் இங்கிலாந்து அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஏற்கெனவே இங்கிலாந்திற்கு சென்றடைந்துள்ளது.
Trending
இந்நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எங்கு சென்றாலும் அவர்கள் தங்களது திறனை வெளிப்படுத்துவர் என நியூசிலாந்து நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் நெய்ல் வாக்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர்,“உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தரமான பந்து வீச்சாளர்கள் நிறைய உள்ளனர். அதேசமயம் உலகில் எங்கு போட்டிகள் நடைபெற்றாலும் அங்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் ஆதிக்கம் நிறைந்ததாகவே இருக்கும். ஏனெனில் அவர்கள் மிகவும் திறமையானவர்கள்.
மேலும் இங்கிலாந்து மைதானங்களை பொறுத்தவரை மிகவும் தட்டையான தாக இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் உங்களால் பந்தை எளிதாக ஸ்விங் பண்ண முடியாது. அதனால் மைதானத்தின் தன்மை எப்படி இருந்தாலும் அதற்கேற்றார் போல் பந்துவீச பயிற்சி மேற்கொண்டு வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now